சேலம் ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு நாடகம்...

ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது.

Update: 2018-08-24 05:18 GMT
ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. ரயிலில் பயணம் செய்யும்போது பெண்கள் அதிகபடியான நகைகளை அணிவதை தவிர்க்க வேண்டும் என்றும், நகைகள் மற்றும் உடமைகளை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு தகவல்கள் நாடகத்தில் இடம்பெற்றிருந்தது. ரயில் பயணத்தின் போது இடையூறு ஏற்பட்டால் அவசர அழைப்பிற்கு 182 என்ற எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்