சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு வழங்கிய சிறுமி
விழுப்புரத்தைச் சேர்ந்த அனுப்பிரியா சைக்கிள் வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தை கேரள வெள்ள பாதிப்புக்கு அளிக்க முன்வந்துள்ளார்.;
* விழுப்புரத்தைச் சேர்ந்த கே.கே.ரோடு சிவராம் லே-அவுட் பகுதியைச் சேர்ந்த சிவசண்முகநாதன்-லலிதா தம்பதியரின் மகள் அனுப்பிரியா, பிறந்த நாளுக்காக, சைக்கிள் வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தை கேரள வெள்ள பாதிப்புக்கு அளிக்க முன்வந்துள்ளார்.
* LKG முதல் 4 ஆண்டுகளாக உண்டியலில் சேமித்து வைத்திருந்த 8 ஆயிரத்து 246 ரூபாயை, கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு வங்கி வரைவோலை எடுத்து அனுப்பவுள்ளதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மாணவி அனுப்பிரியாவிற்கு ஆண்டுதோறும் புதிய சைக்கிள் - ஹீரோ மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் அறிவிப்பு
Anupriya, parnam to you. You are a noble soul and wish you spread the good around. Hero is too pleased to give you one bike every year of your life. Pl share your contact on my account. Love you and best wishes. Prayers for Kerala https://t.co/vTUlxlTnQR
— Pankaj M Munjal (@PankajMMunjal) August 19, 2018
* இதனிடையே, சைக்கிள் வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு கொடுத்துள்ள மாணவி அனுப்பிரியாவிற்கு ஆண்டுதோறும் ஒரு புதிய சைக்கிளை வழங்க ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது.
* இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பங்கஜ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மாணவியின் உன்னதமான ஆத்மாவை வணங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்