காவிரியில் வெள்ளப்பெருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

Update: 2018-08-16 10:34 GMT
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், டெல்டா மாவட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.தென்மாவட்டங்களில்,  தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய மழை பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, ஆலோசிக்கப்பட்டது.இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கவுள்ள வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க வலியுறுத்தி கேரள முதலமைச்சர் எழுதியுள்ள கடிதம் குறித்தும், கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்