ராஜராஜசோழன் சிலை விவகாரம் : சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ராஜராஜசோழன் சிலையை திருடியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு குறித்து 6 வாரத்திற்குள் பதிலளிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Update: 2018-08-14 06:55 GMT
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ராஜ ராஜசோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் மீட்கப்பட்டன. இதனை தொடர்ந்து சாராபாய் அறக்கட்டளை நிர்வாகி கிரா மீது வழக்கு தொடரப்பட்டது. இதனை ரத்து செய்யக் கோரி கிரா சாராபாய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 1960ஆம் ஆண்டு காணாமல்போன சிலைகள் தான் என்பதை நிரூபித்து விட்டால், அவற்றை வழங்கி விட தயாராக இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் ஆதிகேசவலு 6 வாரத்திற்குள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்