"75,448 பயணாளிகளுக்கு கறவை பசுக்கள் வழங்கப்பட்டுள்ளது" - உடுமலை ராதாகிருஷ்ணன்

2016-17 நிதி ஆண்டில் இலவச திட்டங்களுக்கு வெகுவாக நிதி குறைக்கப்பட்டது என்ற தகவலை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார்.

Update: 2018-08-10 02:06 GMT
கணக்கு தணிக்கை அறிக்கையில், இலவச கறவை பசு வழங்கும் திட்டத்திற்கான ஒதுக்கீடு 80 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கடந்த 2016-17ஆம் ஆண்டு வறட்சி ஆண்டாக அறிவிக்கப்பட்டதால், திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், தற்போது பசுக்கள் வழங்கி வருவதாகவும் கூறினார். கடந்த 7 ஆண்டுகளில் 75 ஆயிரத்து 448 பேருக்கு 274 புள்ளி 65 கோடி ரூபாய் செலவில் இலவச பசு மாடுகள்  வழங்கி உள்ளதாகவும் கூறினார். தணிக்கை துறையின் அறிக்கை எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது என தெரியவில்லை எனவும் அவர் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்