அங்கீகாரம் இல்லாத 5000 தனியார் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தகவல்

Update: 2018-08-09 11:34 GMT
தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையின் கீழ், 2000 பள்ளிகளும், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் துறையின் கீழ்  ஆயிரம் பள்ளிகளும், பள்ளி கல்வித்துறையின் கீழ் 1000 பள்ளிகள் என 5000 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இன்றி இயங்கி வருகின்றன. இந்நிலையில் இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியான அரசாணையில், 2019 ஆம் ஆண்டு மே மாதம் இறுதி வரை ஒரு ஆண்டிற்கு அங்கீகாரத்தை நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிக அங்கீகாரம் என்றும், அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த கால கட்டத்திற்குள் அரசின் விதிமுறைகளை பூர்த்தி செய்து, முறையான அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 2 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்