மாற்று திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு பேருந்து : மும்பை நிறுவனம் இலவசமாக வழங்கியது
பதிவு: ஆகஸ்ட் 03, 2018, 09:35 AM
சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள மாற்று திறனாளிகளுக்கான தேசிய நிறுவனத்துக்கு மும்பையை சேர்ந்த ஒரு நிறுவனம் 26 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்பு பேருந்தை வழங்கியது. மாற்று திறனாளி குழந்தைகள் எளிதில் பேருந்தில் ஏறுவதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 4 நான்கு சக்கர நாற்காலிகள் , 39 இருக்கைகளையும் அந்த நிறுவனம் இலவசமாக வழங்கியதாக நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.