மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியாக உயர்வு
பதிவு: ஜூலை 21, 2018, 03:41 PM
கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதையடுத்து, கபிணி அணையில் இருந்து உபரி வெளியேற்றப்படுகிறது. இதனையடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 புள்ளி ஆறு மூன்று அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு நீர் வரத்து 64 ஆயிரத்து 595 கன அடியாக உள்ளது.
அதேபோல் மேட்டூர் அணையின் நீர் இருப்பு 85 புள்ளி ஒன்று ஆறு டி.எம்.சி.யாக உள்ளது.