அப்பல்லோ மருத்துவமனையில் வருகிற 29 ஆம் தேதி ஆய்வு நடத்த திட்டம்

அப்பல்லோ மருத்துவமனையில் வருகிற 29 ஆம் தேதி, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

Update: 2018-07-13 14:03 GMT
ஜெயலலிதா தங்கி சிகிச்சை பெற்ற அறைகள், எம்பாம்மிங் செய்யப்பட்ட அறை, மருத்துவ குழு, சசிகலா, அமைச்சர்கள், அதிகாரிகள்  தங்கி  இருந்த அறைகளில் இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது. இந்த ஆய்வில், ஆணைய வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி மற்றும் நிரஞ்சன் ஈடுபடுவர் என, கூறப்பட்டுள்ளது.  

இது தவிர சசிகலா தரப்பில் இரண்டு வழக்கறிஞர்கள் செல்ல அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் பார்வையாளர்கள் நேரம் முடிந்த பின்பு இரவு 7 மணியில் இருந்து 7.45 மணி வரை 45 நிமிடங்கள் ஆய்வு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு தேவையற்ற தொந்தரவு ஏற்படும் என்பதற்காக ஆய்வின் போது அப்பல்லோ மருத்துவர்களிடமோ நிர்வாகத்திடமோ எந்த கேள்வியும் எழுப்ப கூடாது என்றும், ஆணையத்தின் ஆய்வால் வருவாய் இழப்பு ஏற்படும் என அப்பல்லோ கருதினால் இழப்பீடு தர ஆணையம் தயாராக உள்ளதாகவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இறுதியாக, எந்த காரணத்தை கொண்டும் ஆணையத்திற்கு கொடுக்கப்பட்ட தேதியும் நேரமும் மாற்றம் செய்ய இயலாது என்றும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்