புதுக்கோட்டையில் வியாபாரியை கட்டிப் போட்டு 98 சவரன் நகை கொள்ளை

4 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு;

Update: 2018-07-10 11:09 GMT
காரைக்குடியை சேர்ந்த நகை வியாபாரி விக்னேஷ், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கே.புதுப்பட்டி ஆற்றுப்பாலத்தில் காரில் வந்தபோது, நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளது. 
கண்ணாடியை உடைத்து, விக்னேஷை தாக்கியதுடன், அவரது கை, கால்களை கட்டிப்போட்டு விட்டு காரில் இருந்த 98 சவரன் நகை,  ரொக்கப் பணம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் 
சென்றுள்ளது. தகவலறிந்த புதுப்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து நகை, பணத்துடன் தப்பியோடிய கும்பலை வலைவீசித் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்