மீன்களை பதப்படுத்த ரசாயனம் பயன்படுத்துவதாகப் புகார்

சென்னை காசிமேட்டில் இருந்து கேரளாவுக்கு மீன்கள் ஏற்றுமதி குறைந்ததால், மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2018-07-09 08:18 GMT
காசிமேட்டில் இருந்து கேரள மாநிலத்துக்கு திருக்கை, கேரை, சூறை, மயில் கோலா போன்ற மீன்கள் ரகங்கள் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், மீன்களை பதப்படுத்துவதற்காக ரசாயனம் பயன்படுத்தப்படுவதாகவும் அதனால், புற்றுநோய் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் தகவல் வெளியானது.உணவு பாதுகாப்பு துறையினரின் சோதனையில், ரசாயனம் சேர்ப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் காசிமேட்டில் இருந்து கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்களின் விற்பனை குறைந்து விட்டதாக, வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்