வைகோவை தரக்குறைவாக பேசிய வழக்கறிஞர்கள் மீது மதிமுகவினர் சரமாரி தாக்குதல்

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வைகோவை தரக்குறைவாக பேசிய வழக்கறிஞர்கள் சிலரை, ம.தி.மு.க.-வினர் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2018-07-07 02:14 GMT
கடந்த 2009ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி  என்.டி.பி.எல் அனல்மின் நிலையத்திற்கு அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வந்த போது மதிமுக பொதுசெயலாளர் வைகோ கருப்பு கொடி காட்டினார். 

இது தொடர்பான வழக்கின் விசாரணைக்காக, வைகோ நேற்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜரானார். முன்னதாக, நீதி மன்ற வளாகத்தில் வைகோவை நடந்து சென்ற போது வழக்கறிஞர்கள் சிலர் அவரை தரக்குறைவாக பேசி முழக்கமிட்டனர்.

 
நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு,  வெளியே வந்த கவைகோவை அதே வழக்கறிஞர்கள் மீண்டும் முழக்கமிட்டு, தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனைக் கண்டு கோபமடைந்த ம. தி. மு. க -வினர் குடிபோதையில் இருந்த ஜெகதீஸ், வெற்றி ஆகிய 2 வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்