முரண்பட்ட அறிவிப்புகள்.. ரிசல்ட் பார்த்தபின் குழம்பி தவிக்கும் 10th மாணவர்கள் | Thanthitv

Update: 2024-05-10 07:49 GMT

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள அறிக்கையில், 10ம் வகுப்பு பொது தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு 13ம் தேதியிலிருந்து, துணை தேர்வு நடைபெறும் நாள் முன்பு வரை சிறப்பு வகுப்புகள் நடைபெற வேண்டும் என்றும், சனிக் கிழமைகளில் பயிற்சி தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில், வரும் 16ம் தேதிக்கு பிறகு வெப்பத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என்பதால் பள்ளி மாணவர்களுக்கு எவ்விதமான சிறப்பு வகுப்புகளோ, பயிற்சிகளோ நடைபெறக் கூடாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்... தலைமைச் செயலாளரின் இந்த உத்தரவு காரணமாக, கல்வித்துறை அதிகாரி வெளியிட்ட அறிக்கை ரத்து செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்