டி20 கிரிக்கெட்... வங்கதேசத்துக்கு ஷாக் கொடுத்த அமெரிக்கா

Update: 2024-05-22 06:39 GMT

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்று, அமெரிக்க அணி அதிர்ச்சி அளித்துள்ளது. டெக்சாஸில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேசம், 20 ஓவர்களில் 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து விளையாடிய அமெரிக்க அணி, 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் அமெரிக்கா முன்னிலை பெற்றுள்ளது. டி20 தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் உள்ள வங்கதேசத்தை, பத்தொன்பதாவது இடத்தில் உள்ள அமெரிக்கா வீழ்த்தி அதிர்ச்சி அளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்