"ஆஸ்திரேலியா பிரதமர் அலுவலகத்தில் ரெய்டு.. மோடி மைதானத்தின் பெயர் மாற்றம்" - மஹுவா மொய்த்ரா

Update: 2023-11-20 03:07 GMT

ஆஸ்திரேலியா பிரதமர் அலுவலகத்தில் ரெய்டு.. மோடி மைதானத்தின் பெயர் மாற்றம்" - போட்டு தாக்கிய மஹுவா மொய்த்ரா

உலக‌க் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, பாஜகவை சீண்டியுள்ளார். எக்ஸ் தளத்தில், பிரேக்கிங் நியூஸ் என குறிப்பிட்டு, ஆஸ்திரேலிய பிரதமர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடப்பதாக கூறியுள்ளார். மேலும், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தின் பெயர் மாற்றப்பட்டு, ஜவஹர்லால் நேரு கிரிக்கெட் மைதானத்தில் உலக‌க்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த‌தாகவும் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். அவரது பதிவை, பல லட்சம் பேர் பார்த்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்தும், கருத்து பதிவிட்டும் வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்