கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் - வெள்ளி வென்ற தமிழக வீரர்

Update: 2024-01-23 07:14 GMT

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளின் ஆடவர் ஆர்ட்டிஸ்டிக் யோகாவில் (Artistic yoga) தமிழக வீரர் சித்தேஷ் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற யோகா போட்டியில் தங்கப் பதக்கத்தை மகாராஷ்டிர வீரர் ரோஹன் வசப்படுத்தினார். தமிழக வீரர் சித்தேஷ் வெள்ளி வென்ற நிலையில், மற்றொரு மகாராஷ்டிர வீரர் ஸ்வராஜ் வெண்கலம் வென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்