தோற்காமலே IPL தொடரிலிருந்து வெளியேறியது முதல் அணி.. CSK-வுக்கும் ஒரு அதிர்ச்சி

Update: 2024-05-09 02:42 GMT

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் தலா 16 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா அணி முதலிடத்திலும், ராஜஸ்தான் அணி 2வது இடத்திலும் நீடிக்கின்றன. நேற்றைய வெற்றி மூலம் 14 புள்ளிகளுடன் ஐதராபாத் அணி சென்னையை பின்னுக்கு தள்ளி 3வது இடத்திற்கு முன்னேறியது. தலா 12 புள்ளிகளுடன் சென்னை அணி 4வது இடத்திலும், டெல்லி அணி 5வது இடத்திலும் உள்ளன.

மோசமான தோல்வியால் லக்னோ அணி ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தலா 8 புள்ளிகளுடன் பெங்களூரு, பஞ்சாப், மும்பை, குஜராத் அணிகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். குறிப்பாக நடப்பு தொடரில் முதல் அணியாக மும்பை தொடரில் இருந்து வெளியேறியது..

Tags:    

மேலும் செய்திகள்