வாணவேடிக்கை காட்டிய SRH... சிக்கி சின்னாபின்னமான டெல்லி... ஹைதராபாத் மிரட்டல் வெற்றி

Update: 2024-04-21 04:35 GMT

டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 266 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89 ரன்களும், ஷபாஸ் அகமத் 59 ரன்களும் எடுத்தனர். பின்னர், 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் எடுத்தது. அந்த அணியில், அதிகபட்சமாக ஜேக் பிரேசர் 65 ரன்களும், அபிஷேக் 42 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம், 67 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது....

Tags:    

மேலும் செய்திகள்