இந்தியா - தென் ஆப்பிரிக்கா 2வது டெஸ்ட் போட்டி.. ஆல்ரவுண்டர் ஜடேஜா களமிறங்குவார் என தகவல்

Update: 2023-12-30 15:14 GMT

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விளையாடுவார் என தகவல் வெளியாகி உள்ளது. ஜனவரி 3ம் தேதி 2வது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நகரில் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் தசைப்பிடிப்பு காரணமாக விளையாடாத ஜடேஜா, முழு உடற்தகுதியை அடைந்து இந்தப் போட்டியில் களமிறங்குவார் எனக் கூறப்படுகிறது. இதனிடையே காயம் காரணமாக பங்கேற்க முடியாத முகமது ஷமிக்கு பதிலாக ஆவேஷ் கான் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்