மே 12..சேப்பாக்கத்தில் தோனியின் கடைசி மேட்ச்சா கூட இருக்கலாம்...டிக்கெட் விலைய கேட்டாலே கண்ண கட்டுதே

Update: 2024-05-08 04:23 GMT

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 12-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு, நாளை மே 9-ஆம் தேதி காலை 10.40 மணிக்கு தொடங்கும் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிக்கெட்டின் விலை ஆயிரத்து 700 ரூபாய் முதல் ஆறாயிரம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. PAYTM INSIDER இணையதளத்தின் வாயிலாக ஆன்லைன் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்