CSK கோட்டையில் நடராஜன் வெறித்தன பயிற்சி | IPL 2024

Update: 2024-05-24 03:32 GMT

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரர்களான டிராவிஸ் ஹெட், தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் உள்ளிட்டோர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.நடப்பு ஐ.பி.எல் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள தொடரில் இரண்டாவது தகுதிச் சுற்று மற்றும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மற்றும் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதில், இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக கொல்கத்தா ஏற்கனவே தகுதிப்பெற்ற நிலையில் மற்றொரு அணி எது என்பதை முடிவு செய்யும் வகையில் இன்று நடக்கும் 2வது தகுதிச்சுற்று போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்-சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்