கபில்தேவ் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்! Kapil dev

இந்தியா, இலங்கை இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணிக்கு 447 ரன்களை இந்தியா இலக்காக நிர்ணயித்துள்ளது.;

Update: 2022-03-14 04:19 GMT
இந்தியா, இலங்கை இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணிக்கு 447 ரன்களை இந்தியா இலக்காக நிர்ணயித்துள்ளது. பெங்களூருவில் நடைபெற்று வரும் இப்போட்டியில், முதல் இன்னிங்சில் இந்தியா 252 ரன்களும், இலங்கை அணி 109 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து 2வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி, 303 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதையடுத்து 447 ரன்கள் என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி, 2-ம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 28 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணியில், அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட், 28 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த கபில்தேவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்