டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகள் - ஜமைக்கா வீராங்கனைக்கு தங்கப் பதக்கம்

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்கா வீராங்கனை எலைன் தாம்ப்சன் தங்கப் பதக்கம் வென்று உள்ளார்.

Update: 2021-08-04 04:29 GMT
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்கா வீராங்கனை எலைன் தாம்ப்சன் தங்கப் பதக்கம் வென்று உள்ளார். போட்டி தொடங்கியதும், மின்னல் வேகத்தில் ஓடத்தொடங்கிய அவர், பந்தய தூரத்தை 21 வினாடி 53 மணித்துளிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். மகளிர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் தங்கப் பதக்கம் வென்ற அவர், 200 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்று சாதனை படைத்து உள்ளார். மேலும், இந்த போட்டியில், நமீபியா வீராங்கனை கிறிஸ்டைன் போமா வெள்ளிப் பதக்கத்தையும், அமெரிக்க வீராங்கனை கேப்ரியல் தாமஸ் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்