ஒரு மணி நேரத்தில் 951 பர்ப்பீகள் - சாதனை புரிந்த குத்துசண்டை வீரர்

பர்ப்பி எனப்படும் உடற்பயிற்சியை ஒரு மணி நேரத்தில் 951 முறை செய்து கின்னஸ் சாதனை புரிந்துள்ள குத்து சண்டை வீரர் பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

Update: 2021-07-22 04:35 GMT
பர்ப்பி எனப்படும் உடற்பயிற்சியை ஒரு மணி நேரத்தில் 951 முறை செய்து கின்னஸ் சாதனை புரிந்துள்ள குத்து சண்டை வீரர் பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம். பிரேசிலை சேர்ந்த 35 வயதான காசினோ ரோட்ரிக்ஸ் லாரெனோ, பல வகையான சண்டைகளை கலந்து பயன்படுத்தும் எம்.எம்.ஏ குத்துசண்டை வீரர் ஆவார். 2019இல் பிரேசிலில் இருந்து, சிங்கபூருக்கு இடம் பெயர்ந்து, அங்கு எம்.எம்.ஏ குத்துசண்டை போட்டிகள் மற்றும் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.லாரெனோ,  பர்ப்பி உடற்பயிற்சி, கின்னஸ்  சாதனை முயற்சி, உடற் பயிற்சி கூடங்கள் பர்ப்பி எனப்படும் தண்டால் போன்ற ஒரு வகையான உடற்பயிற்சி மிக கடினமான பயிற்சியாக கருதப்படுகிறது.ஒரு மணி நேரத்தில் 951 பர்ப்பீகள் எடுத்து, கின்னஸ் உலக சாதனையை காசினோ ரோட்ரிக்ஸ் லாரெனோ புரிந்துள்ளார்.  இதற்காக கடந்த 9 மாதங்களாக கடும் பயிற்சி எடுத்துக் கொண்டார். ஆனால் இந்த சாதனையை நிகழ்த்துவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு அவருக்கு காலில் அடிப்பட்டது. ஆனாலும் திட்டமிட்டபடி இந்த சாதனையை செய்து காட்டி, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.கடந்த மார்ச் 6ஆம் தேதி நிக் அனபொல்ஸ்கி என்பவர் ஒரு மணி நேரத்தில் 879 பர்ப்பீகள் எடுத்து சாதனை படைத்திருந்தர். அவரின் சாதனையை முறியடித்துள்ள காசினோ ரோட்ரிக்ஸ் லாரெனோ, ஒரு மணி நேரத்தில் 1000 பர்ப்பீக்களை எடுக்க திட்டமிட்டுள்ளார்.அவரின் அண்ணன் மகளுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான இதய நோய் சிகிச்சைக்காக, நிதி திரட்ட, இந்த சாதனையை அவர் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவரின் சாதனை, உடல் பயிற்சிகள் செய்ய மக்களை ஊக்குவிக்கும் என்று நம்புவதாக கூறுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்