ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - சென்னை அணி 3வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில், சென்னை அணி 3வது வெற்றியை பதிவு செய்தது.;
ஹைதராபாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை - ஹைதராபாத் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. முதல் பாதியில் 40வது ,43 வது நிமிடங்களில் சென்னை அணி இரு கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியில் சென்னை வீரர் வால்ஸ்கிஸ் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் சென்னை அணி 3க்கு 1 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத்தை வீழ்த்தியது.