சென்னையில் உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி ஆடுகளம் : திறந்து வைத்தார் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

போரூரில் உள்ள ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி ஆடுகளம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.;

Update: 2019-10-30 12:47 GMT
போரூரில் உள்ள ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி ஆடுகளம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ இன்று பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இந்த மையத்தை பார்க்கும்போது இங்கிருந்து ஒரு ஒலிம்பிக் வீரர் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறினார். நாட்டில் ஒற்றுமையை உருவாக்குவது விளையாட்டு தான் என்றும், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் விளையாட்டு ஒரு படிப்பாக கொண்டு வரப்படும் என்றும்  மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ தெரிவித்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்