பயிற்சிக்கு திரும்பினார் புவனேஷ்வர் குமார் - ரசிகர்கள் மகிழ்ச்சி
காயம் காரணமாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், விளையாடாத இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், மீண்டும் பயிற்சிக்கு திரும்னார்.;
காயம் காரணமாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், விளையாடாத இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், மீண்டும் பயிற்சிக்கு திரும்னார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது, புவனேஷ்வர் குமாருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவரது காயம் விரைவில் குணமடையும் என மருத்துவர்கள் கூறியதால், அணியுடன் புவனேஷ்வர் குமார் பயணிப்பார் என பி.சி.சி.ஐ. தெரிவித்திருந்தது. இந்நிலையில் அவர் வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ள காட்சி வெளியாகியுள்ளது. இதனால், இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.