மறைந்து போன தமிழரின் கரலாகட்டை விளையாட்டு : மீட்டு எடுக்கும் முயற்சியில் இலவச பயிற்சி

பாரம்பிரிய கரலாகட்டை விளையாட்டை மீட்டெடுக்கும் முயற்சியாக சர்வதேச கரலாக்கட்டை விளையாட்டு சம்மேளனம் 5 ஆயிரம் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது.

Update: 2018-12-09 21:47 GMT
மறைந்துபோன பாரம்பரிய கலையான கரலாகட்டை விளையாட்டை, மீட்டெடுக்கும் முயற்சியில் சர்வதேச கரலாக்கட்டை விளையாட்டு சம்மேளனம் மற்றும்  கரலாக்கட்டை விளையாட்டு சங்கம் இறங்கியுள்ளது.
அதன்படி 8 மாவட்டங்ளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆயிரம் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருவதாகும் அந்த சங்கங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இது தொடர்பாக நாமக்கல் பகுதியில் துண்டு பிரசுரங்களை வழங்கிய கரலாகட்டை பயிற்சியாளர்கள் அப்பகுதி இளைஞர்களுக்கு பயிற்சியும் அளித்தனர்.சிறந்த உடற்பயிற்சியான கரலாகட்டை விளையாட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என்றும், இளைஞர்கள் பலரும் இதனை கற்க அதிக ஆர்வம் காட்டிவருவதாகவும்
கரலாகட்டை பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்