10 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்து விராட் கோலி புதிய உலக சாதனை...

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி புதிய உலக சாதனையை படைத்தார்.

Update: 2018-10-24 13:15 GMT
* சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி புதிய உலக சாதனையை படைத்தார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கேப்டன் கோலி 81 ரன்கள் கடந்திருந்த போது இந்த சாதனையை நிகழ்த்தினார். இதனை 205 வது இன்னிங்சிலே விராட் கோலி எட்டினார்.
* இதற்கு முன் 259 இன்னிங்சில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 10 ஆயிரம் ரன்களை கடந்ததே முந்தைய சாதனையாக இருந்தது.  தொடர்ந்து 37 சதத்தை விராட் கோலி பூர்த்தி செய்ய, 50 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்தது. கேப்டன் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 157 ரன்கள் குவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்