இந்தியா இங்கிலாந்து நாளை கடைசி டெஸ்ட் : ஜடேஜா, விஹாரிக்கு வாய்ப்பு?

இந்தியா, இங்கிலாந்துக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

Update: 2018-09-06 12:54 GMT
இந்தியா, இங்கிலாந்துக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இதற்காக இந்திய வீரர்கள் லண்டன் ஓவல் மைதானத்தில் முகாமிட்டு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். தொடரை இந்தியா ஏற்கனவே 3க்கு 1 என்ற கணக்கில் இழந்த நிலையில், கடைசி போட்டியில் வென்று இழந்த பெருமையை மீட்கும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது. அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா, ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ஹனுமா விஹாரி  களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  
Tags:    

மேலும் செய்திகள்