டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : மதுரையை வீழ்த்தியது கோவை

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் மதுரை அணிக்கு எதிரான போட்டியில் கோவை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Update: 2018-08-05 03:24 GMT
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் மதுரை அணிக்கு எதிரான போட்டியில் கோவை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நெல்லையில் நடைபெற்ற இந்த போட்டியை, இந்திய அணியின் நட்சத்திர வீரர் தோனி, டாஸ் போட்டு தொடங்கி வைத்தார். தோனியை கண்டதும் ரசிகர்கள் எழுப்பிய ஆரவாரத்தால் அரங்கமே அதிர்ந்தது.  டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 103 ரன்களை எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய கோவை அணி, 18வது ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
Tags:    

மேலும் செய்திகள்