அரசியலில் விஜய்.. ஓபனாக பேசிய கே.எஸ்.அழகிரி

Update: 2024-02-04 03:43 GMT

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததை வரவேற்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கிருஷ்ணன் காரணை பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் 2 நாள் கருத்தரங்கம் தொடங்கியது. இதில் கலந்து கொண்ட பின்னர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசினார். அண்ணாமலை எத்தனை கிலோமீட்டர் நடந்துள்ளார்? எத்தனை ஊர்களில் நடந்துள்ளார்? என்பதையெல்லாம் பார்த்துத்தான் வெற்றியா? தோல்வியா என்பது குறித்து சொல்ல வேண்டும் என்றார். மேலும் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்த‌தற்கு வாழ்த்து கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்