தவெக தலைவர் விஜய் நிர்வாகிகளுக்கு உத்தரவு | Tamilaga Vettri Kazhagam

Update: 2024-05-26 09:15 GMT

234 தொகுதிகளிலும் அன்னதானம் வழங்க தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி உலக பட்டினி தினமான வரும் 28ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகிகள், சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் தேர்தல் வழிகாட்டும் விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் மக்கள் நல பணியில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்