"பரம்பரை சொத்து வரி விதிக்கும் எண்ணம் எதுவும் இல்லை" - மல்லிகார்ஜுன் கார்கே திட்டவட்டம்

Update: 2024-04-25 03:40 GMT

பரம்பரை சொத்து வரியை விதிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார்.

அமெரிக்காவில், ஒருவர் இறந்து விட்டால் அவரது சொத்தில் 55 சதவீதத்தை அரசே எடுத்துக் கொள்ளும் பரம்பரை சொத்து வரி விதிப்பு முறை அமல்படுத்துவது குறித்து நாம் விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் அயலக அணியின் தலைவர் சாம் பிட்ரோடா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவருடைய பேச்சை மேற்கோள் காட்டி, நாட்டில் உள்ள சொத்துக்களின் மீது 50 சதவீத பரம்பரை வரி விதிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோதி உள்ளிட்ட பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கேரளாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சொத்து வரியோ அல்லது பரம்பரை வரியோ விதிக்கும் உள்நோக்கம் காங்கிரஸ் கட்சியிடம் இல்லை என்று, கட்சியால் அவ்வாறு செய்ய முடியாது என்றும் கூறினார்.

வாக்குகளை பெறுவதற்காக பிரதமர் மோடி, இத்தகைய விளையாட்டுகளை விளையாடி வருவதாகவும் அவர் கூறினார். மேலும், பெண்களின் தாலி பாதுகாப்பாக இருக்காது என பிரதமர் மோடி பொய் சொல்லி வருவதாகவும் அவர் கூறினார். நாட்டுக்காக ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக என்ன தியாகம் செய்துள்ளது என்று கேள்வி எழுப்பிய அவர், நாட்டின் விடுதலைப் போராட்டத்தில்கூட அவர்கள் பங்கேற்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்