ரூ 800 கோடி செலவு.. பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

Update: 2024-02-13 10:08 GMT

ரூ 800 கோடி செலவு.. பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

30 ஆண்டு காலம் பழமையான 8 ஆயிரம் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இரண்டரை ஆண்டுகளில் ஆரம்ப பள்ளி, நடுநிலை பள்ளிகளுக்கு 800 கோடி ரூபாய் செலவில் 6000 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், மேல்நிலை, உயர்நிலை பள்ளியில் 250 கோடி ரூபாயில் 1200 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாவும் தெரிவித்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர் நிலை மேல்நிலைப்பள்ளிகளுக்கு 1050 கோடி ரூபாயில் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்