``தேர்தல் சாணக்கியன் பிரசாந்த் கிஷோரை தண்ணி குடிக்க வைத்த ஜர்னலிஸ்ட்'' - விமர்சனமும் பதிலடியும்

Update: 2024-05-24 02:46 GMT

இம்முறை மீண்டும் பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என தாம் கணித்தது விமர்சனமாகிய நிலையில், இதற்கு பதில் அளித்துள்ளார், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்.

தேர்தல் கணிப்பு குறித்து ஒரு நேர்காணலில் பிரசாந்த் கிஷோர் பேட்டியளித்திருந்தார். அப்போது இதற்கு முன்பு இமாச்சலில் காங்கிரஸ் தோல்வியுறும் என்று கடந்த 2022ல் பிரசாந்த் கிஷோர் கணித்தது நடக்காமல் போனது குறித்து நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். இதனை மறுத்த பிரசாந்த் கிஷோர், தாம் அவ்வாறு கணிக்கவில்லை என்றும் அதற்கான வீடியோ ஆதாரம் இருந்தால் தான் தேர்தல் வியூக பணியை நிறுத்தி கொள்வதாகவும் தெரிவித்தார். அப்போது இடையில் அவர் தண்ணீர் குடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய போது, பலரும் பிரசாந்த் கிஷோரை தொகுப்பாளர் தண்ணீர் குடிக்க வைத்து விட்டதாக விமர்சித்திருந்தனர். இதனிடையே தனது தேர்தல் கணிப்பை கண்டு திகைப்பவர்கள் ஜூன் 4ஆம் தேதி, தேர்தல் முடிவு வெளியாகும் பொழுது போதுமான அளவு தண்ணீரை கையில் வைத்திருக்க வேண்டும் என தனது சமூக வலைதள பதிவின் மூலம் பிரசாந்த் கிஷோர் பதிலடி கொடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்