மோடி பேச்சால் வெடிக்கும் பிரளயம்.. தமிழிசை பரபரப்பு அறிக்கை

Update: 2024-05-23 03:58 GMT

ஒட்டுமொத்த தமிழர்களையும் பிரதமர் மோடி, அவமதித்துவிட்டார் என்ற கருத்தை தமிழக முதல்வர் வேண்டுமென்றே பரப்பி கொண்டிருப்பதாக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் தமிழர்கள் மீதும் தமிழ்மொழி மீதும் பற்றுக் கொண்டிருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒரு தனிநபரை பற்றி கூறியதை, திரித்து பேசி, அரசியல் ஆதாயம் தேட பார்ப்பதாகவும் தமிழிசை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் உண்மையான தமிழ்ப்பற்றை பொறுத்துக் கொள்ள முடியாத முதலமைச்சர் தமிழக மக்களுக்கும் பிரதமருக்கும் ஒரு இடைவெளியை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் நினைப்பதாகவும் தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்