"பிரதமர் மோடியின் ஒரே நோக்கம்".. பிரியங்கா காட்டம்

Update: 2024-05-27 14:18 GMT

ஆட்சி அதிகாரத்தை அடைவதுதான் பாஜக மற்றும் பிரதமர் மோடியின் ஒரே நோக்கம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

ஹிமாச்சல பிரதேச மாநிலம், சம்பா பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர்,

ஹிமாச்சல் பிரதேசத்தை தனது இரண்டாவது வீடு எனக் கூறும் பிரதமர் மோடி, மிகப்பெரிய பேரிடர் ஏற்பட்டபோது அவர் தனது முகத்தைக் கூட காட்டவில்லை என்று குற்றம்சாட்டினார். ஆட்சி அதிகாரத்தை அடைவதுதான் பாஜக மற்றும் பிரதமர் மோடியின் ஒரே நோக்கம் என்று குற்றம்சாட்டினார். பாஜகவிற்கு தேவைப்படும் பணத்தை கோடீஸ்வரர்கள் வழங்குவதால், அவர்களுக்கான திட்டங்களையே பாஜக நடைமுறைப்படுத்தி வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். 55 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியால் பணக்கார கட்சியாக முடியவில்லை என்றும், பத்தே ஆண்டுகளில் பாஜக உலகின் மிகப்பெரிய பணக்கார கட்சியாக மாறியிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்