PM மோடி-க்கு எதிர்பாரா ட்விஸ்ட்..! RSSக்கு கெஜ்ரிவால் திடீர் வேண்டுகோள் | PM Modi

Update: 2024-05-27 12:00 GMT

இதுகுறித்து கெஜ்ரிவால் விடுத்துள்ள அறிக்கையில், 2014-ல் ஆட்சிக்கு வந்த போது தான் இந்நாட்டின் பிரதான சேவகன் என பிரதமர் மோடி கூறியதாகவும், அதன் பின்னர் 2019-ல் தான் இந்நாட்டின் பாதுகாவலன் எனத் தெரிவித்ததாக வும் குறிப்பிட்டுள்ளார். 2024-ல் தாயின் கருவில் பிறக்கவில்லை என்றும் கடவுளின் அவதாரம் என்றும் மோடி கூறுவதாகத் தெரிவித்துள்ள கெஜ்ரிவால், பகவான் ஜெகநாதரும் பிரதமர் மோடியின் பக்தர் என பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்