"ராமர் கோயில் தொடர்பான தீர்ப்பு.." - காங்.ஐ தாக்கிய பிரதமர் மோடி

Update: 2024-05-26 17:01 GMT

உத்தரபிரதேச மாநிலம் கோசியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார். 2012 ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை முதல்முறை வாக்காளர்களுக்கு தெரியாது என்ற பிரதமர் மோடி, முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்த‌தாக கூறினார். இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும், இந்தியா கூட்டணி கட்சியினரே இதைப்பற்றி கவலைப்படுவதில்லை என்றும் விமர்சித்தார். மேலும், இந்தியாவில் உள்ள பெரும்பான்மை சமூகத்தை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற இந்தியா கூட்டணி விரும்புவதாக குற்றம் சாட்டினார். மேலும், ராமர் கோவில் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும் புகார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்