OPS பங்கேற்கும் நிகழ்ச்சியை தவிர்த்த ஓபிஎஸ்ஸின் வலது கரம்

Update: 2024-05-23 12:55 GMT

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது அவரது ஆதரவாளரும், அவரது அணியின் துணை ஒருங்கிணைப்பாளருமான கு.ப.கிருஷ்ணன் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவை ஒட்டி திருச்சி ஒத்தக்கடையில் உள்ள சிலைக்கு, தமது ஆதரவாளர்களுடன் சென்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் பெயர் இடம் பெற்றிருந்தும், ஓ.பி.எஸ். அணியின் துணை ஒருங்கிணைப்பாளர் கு.ப.கிருஷ்ணன் கலந்து கொள்ளவில்லை. ஏற்கனவே, ஓ.பி.எஸ். மீது புகழேந்தி அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், கு.ப.கிருஷ்ணனும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஓ.பி.எஸ். உடனான நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத கு.ப.கிருஷ்ணன், தமது ஆதரவாளர்களுடன் சென்று, இன்று மாலை பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்