"ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு.." மோடியை கலாய்த்த ராகுல் | Modi | BJP | Rahul Gandhi

Update: 2024-05-27 12:56 GMT

ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு அதானி குறித்து மோடியிடம் அமலாக்கத்துறை ஏதேனும் விசாரணை நடத்தினால், தனக்கு எதுவும் தெரியாது, எல்லாம் பரமாத்மா கூறியது என, மோடி கூறுவார் என்று, ராகுல் காந்தி கிண்டலடித்துள்ளார்.

பிகார் மாநிலம் பக்தியார்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இன்று கிடைத்துள்ள, நிலம், கல்வி, சுகாதாரம், இடஒதுக்கீடு எல்லாம், இந்திய அரசியல் சாசனம் வழங்கிவை என்று குறிப்பிட்டார். வெறும் 22-25 பேரை மட்டும், பிரதமர் மோடி ராஜாக்களாகவும் மகாராஜாக்களாகவும் மாற்ற இருப்பதாக தெரிவித்தார். ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு அதானியின் ஊழல்கள் குறித்து மோடியிடம் அமலாக்கத்துறை கேள்வி எழுப்பினால், தனக்கு எதுவும் தெரியாது எல்லாம் பரமாத்மா சொன்னது என கூறுவார் என ராகுல் காந்தி கிண்டலடித்தார். நீண்ட உரைகள் கொடுப்பதையும் நாட்டை பிளவுபடுத்துவதையும் பிரதமர் மோடி நிறுத்த வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்