"பால் கறக்கும் முன்பே நெய்க்கு சண்டை நடக்கிறது.. நான் உசுரோட இருக்குற வர நடக்காது" - மோடி உருக்கம்

Update: 2024-05-24 02:43 GMT

இந்தியா கூட்டணியில், பசு பால் கறப்பதற்கு முன்பே நெய்க்கு சண்டை நடக்கிறது என பிரதமர் மோடி விமர்சித்தார். மக்களவைத் தேர்தலை ஒட்டி ஹரியானாவின் பிவானியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் பேசிய மோடி,

இந்தியா கூட்டணியின் தற்போதைய நிலை, அவர்கள் பதவிக்காகப் போராடும் அளவுக்கு இருக்கிறது என்று விமர்சித்தார்.

இந்த தேர்தலில் நாட்டின் பிரதமரைத் தேர்ந்தெடுப்பது மட்டுமில்லாமல், நாட்டின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் தேர்தல் என்று கூறினார். தாம் உயிருடன் இருக்கும் வரை தலித்கள், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்