மோடிக்கு ஷாக் கொடுத்த நிதிஷ்குமார்..பிரச்சாரத்தில் விட்ட ஒரு வார்த்தை - பரபரப்பான மேடை...

Update: 2024-05-27 03:05 GMT

மீண்டும் மோடி முதல்வராக வேண்டும் என தாம் விரும்புவதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. பாட்னா சாஹிப் தொகுதிக்கு உட்பட்ட டானியாவான் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், பிரதமருக்கு பதிலாக மோடி மீண்டும் முதல்வராக வேண்டும் என கூறினார்.மேடையில் இருந்த அவரது கட்சியினர் தவறை சுட்டிக்காட்ட முயன்ற போதும், அதனை சரிவர கவனிக்காத நிதிஷ்குமார், ஏற்கனவே மோடி பிரதமராக இருக்கிறார் அதனால் தான் அவர் மீண்டும் பிரதமராக வேண்டும் என தாம் விரும்புவதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்