"அதானிக்கு உதவ சொன்ன கடவுள்" மோடியை சரமாரியாக விமர்சித்த ராகுல் "அம்பானிக்காக பிரதமர் பாடுபடுகிறார்"

Update: 2024-05-26 12:24 GMT

இமாச்சல பிரதேச மாநிலம் நஹானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், இமாச்சலப் பிரதேசத்தில் 22 ஆயிரம் குடும்பங்கள் பேரழிவால் பாதிக்கப்பட்டபோது அவர்களை பற்றி பிரதமர் எந்த கவலையும் படவில்லை என்று கூறினார். அம்பானி-அதானி போன்ற 22 குடும்பங்களின் 16 லட்சம் கோடி ரூபாய் கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார் என்றும், ஆனால் இமாச்சலப் பேரிடரால் ஏற்பட்ட அழிவில் இருந்து மீள 9 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.

இமாச்சலில் ஆப்பிள் விலையில் இருந்து துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்புத் துறைகள் என அனைத்தையும் அதானி கட்டுப்படுத்தி வருகிறது என்றும் குற்றம்சாட்டினார்.

ஒருவேளை அதானிக்கு உதவ வேண்டும் என்று மோடியிடம் கடவுள் சொல்லியிருக்கலாம் என, ராகுல் காந்தி விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்