"இது மேலும் ஒரு சான்று" - மன்மோகன் சிங்கின் புது வீடியோவை வெளியிட்ட பாஜக

Update: 2024-04-26 09:41 GMT

நாட்டின் வளங்களின் மீது இஸ்லாமியர்களுக்கே முன்னுரிமை உள்ளதென திட்டவட்டமாக கூறியவர் மன்மோகன் சிங் என பாஜக மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசிய வீடியோவை பாஜக ஏற்கனவே வெளியிட்டு இருந்த நிலையில், தற்போது 2009 மக்களவை தேர்தல் சமயத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் அது குறித்து அவர் தெரிவித்த கருத்துக்களை பாஜக மீண்டும் வெளியிட்டுள்ளது. இடஒதுக்கீடு முதல் வளங்கள் வரை அனைத்திலும் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் காங்கிரஸ் மனநிலைக்கு இது மேலும் ஒரு சான்று எனவும் பாஜக விமர்சித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்