"நாட்டை அழிக்க காத்திருக்கும்... கேன்சரை விட மோசமான ஆபத்து.." PM மோடி கடும் காட்டம்

Update: 2024-05-22 15:42 GMT

உத்தரபிரதேச மாநிலம் சரஸ்வதியில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, காங்கிரஸ் - சமாஜ்வாடியை கடுமையாக விமர்சித்தார். 60 ஆண்டுகளாக ஒன்னும் செய்யாதவர்கள் மோடியை எதிர்க்கிறார்கள் என்றவர், இரண்டு நபர்களும் ஓடாத பழைய படங்கள், பழைய கதாபாத்திரங்கள் என விமர்சித்தார். அவர்களிடம் புதிதாக ஏதாவது கேட்டிருக்கீங்களா? என கேள்வியை எழுப்பியவர், இந்தியா கூட்டணியில் புற்றுநோயைவிட மோசமான நோய்கள் உள்ளன எனவும் விமர்சித்தார். இந்தியா கூட்டணியில் இருக்கும் வகுப்புவாத அரசியல்.... சாதிவெறி அரசியல்... குடும்ப அரசியல் ஆகிய 3 நோய்களும் நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என காட்டமாக விமர்சித்தார். யாருக்காகவும் எதையும் சம்பாதிக்கவில்லை என்றவர், குடும்ப அரசியல் கட்சிகள் நாட்டை கெடுக்காத வகையில், நாட்டை வலிமையாக்க விரும்புவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்