"திருக்குறள் ஒரு தலைபட்சமாக மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.." - ஆளுநர் ஆர்.என்.ரவி

Update: 2024-05-25 03:47 GMT

திருக்குறள் சித்தாந்த ரீதியாக ஒரு தலைபட்சமாக மொழிபெயர்க்கப்பட்டு உள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி குற்றம் சுமத்தியுள்ளார்.

சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெற்றது. இதில் பேசிய ஆர்.என்.ரவி, தான் ஒரு ஆளுநர் என்பதை விட, திருவள்ளுவரின் சீடன் என்பதில் பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் ஆளுநராக பணியாற்றுவதால், திருக்குறளை ஆழமாக படிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும், மகத்தான ஆழமான விஷயங்களை குறிப்பிடுவதாக ஆச்சரியம் தெரிவித்துள்ளார். திருக்குறள் அறிவார்ந்த, ஆன்மிக மற்றும் சித்தாந்த நோக்கத்துடன் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளதாக கூறிய ஆளுநர், சித்தாந்த ரீதியான திருக்குறள் மொழிபெயர்ப்பு, ஒரு தலைபட்சமாக இருப்பதாக குற்றஞ்சாட்டினார். திருக்குறளை பெரிதும் போற்றும் பிரதமர் மோடி, அதை உலக பொது நூலாக மாற்றும் செயலை நிச்சயம் செய்வார் என்றும் ஆளுநர் தன் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்