`ஒற்றை துப்பு'... திணறும் போலீசார்... ஜெயக்குமார் மரணத்தில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்... திடீர் ரெய்டால் தொற்றிய பரபரப்பு

Update: 2024-05-09 12:58 GMT

நெல்லை காங்கிரஸ் தலைவர் மரண வழக்கில் நான்காவது நாளாக தடயவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், கடந்த சனிக்கிழமை அவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். காங்கிரஸ் கட்சி தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, 8 தனிப்படைகளை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டரா என்ற முடிவுக்கு வரமுடியாமல் போலீசார் குழப்பத்தில் உள்ளனர். இதை உறுதி செய்வதற்காக பிரேத பரிசோதனை அறிக்கை பகுப்பாய்விற்கு அனுப்ப பட்டுள்ளது. அதே போல டி.என்.ஏ சோதனை, விஸ்ரா சோதனைகளும் நடைபெற்று வரும் நிலையில், நான்காவது நாளாக ஜெயக்குமாரின் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் தடயவியல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதே நேரத்தில் சிபிசிஐடி எஸ்.பி முத்தரசி திடீரென நெல்லை மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டார். இந்த திடீர் சோதனையால் ஜெயக்குமாரின் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படுமோ என சந்தேகம் எழுந்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்