வாக்குப்பதிவு எண்ணிக்கை - இந்தியா கூட்டணிக்கு அட்வைஸ் சொன்ன கபில்சிபல்

Update: 2024-05-26 12:09 GMT

வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக பலரும் கூறி வரும் நிலையில், அப்படி நடக்காது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கபில்சிபல் கூறியுள்ளார். வாக்களித்த வேட்பாளருக்கே தனது வாக்கு சென்றுள்ளது என்பதை வாக்காளர் உறுதி செய்ய வேண்டும் என்றும் வாக்கு எண்ணிக்கையிலும் நேரத்திலும் வித்தியாசம் இருந்தால் முறைகேடு குறித்து அறிந்துகொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்குப்பதிவு எந்திரம் திறக்கப்படும் நேரம், வி.வி.பேட் அடையாள எண் உள்ளிட்டவற்றை கவனமாக குறித்து வைத்து கொள்ள வேண்டும் என இந்தியா கூட்டணியினருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் அறிவுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்